×

கொரோனா, வரலாறு காணாத மழை வெள்ளத்தால் செலவினங்கள் இருந்தாலும் தமிழகத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு வருவாய் பற்றாக்குறை குறைப்பு: நிதித்துறை செயலாளர் முருகானந்தம் பேட்டி

சென்னை: சென்னை, தலைமை செயலகத்தில் நிதித்துறை செயலாளர் முருகானந்தம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:  கொரோனா, மழை வெள்ள பாதிப்பால் ஏற்பட்ட செலவினங்கள் இருந்தாலும் கூட, இந்தாண்டு முதன் முறையாக கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிட்டு பார்க்கையில் முதன் முதலாக ரூ.7 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை அதாவது 2014ல் இருந்து ஏறுமுகமாக இருந்தது, இந்தாண்டு அந்த நிலைமை மாறி குறைந்துள்ளது. நிதி பற்றாகுறை மாநில ஜிடிபியில் 3.8 சதவீதம் கடந்த ஆண்டு 4.6 சதவீதமாக ஆக இருந்தது. மேலும் வரும் ஆண்டுகளிலும் நிதி பற்றாகுறை 3.62 ஆக குறைக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஆண்டில் 3 ஆக குறைக்க திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டு வருவாய் பற்றாகுறை ரூ. 55 ஆயிரம் கோடி உள்ளது. வரும் ஆண்டுகளில் வருவாய் பற்றாகுறை இருக்கக் கூடாது என்பது தான் தமிழக அரசின் குறிக்கோள், வரும் ஆண்டுகளில் ரூ. 3 லட்சத்து 33 ஆயிரம் கோடிக்கு மொத்த பட்ஜெட் தொடரும் இருக்கும். இதில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 17 சதவீதம் அதேபோல மூலதன செலவினத்தை பொறுத்தவரை அடுத்த ஆண்டு 13.62 சதவீதம் உயர்த்தி கிட்டத்தட்ட ரூ.43 ஆயிரம் கோடிக்கு மூலதன செலவினங்கள் மேற்கொள்ளப்படும். அரசு பள்ளிகளில் படித்த பெண் குழந்தைகளுக்கு மாதத்திற்கு ரூ.1000 அவர்களின் வங்கி கணக்குக்கு அனுப்படும். இவர்கள் (இளநிலை படிப்பை முடிக்கும் வரை) இதன் மூலம் 6 லட்சம் அரசு பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகள் பயன் அடைவார்கள். இந்த ஆண்டு  இரண்டாம், மூன்றாம் ஆண்டு தற்போது படித்தாலும் வழங்கப்படும். நகைகடன் தள்ளுபடி,மகளிர் கடன் தள்ளுபடி,  பயிர்கடன், கல்விகடன் தள்ளுபடி இதற்காக ரூ.4 ஆயிரத்து 133 கோடி இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. …

The post கொரோனா, வரலாறு காணாத மழை வெள்ளத்தால் செலவினங்கள் இருந்தாலும் தமிழகத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு வருவாய் பற்றாக்குறை குறைப்பு: நிதித்துறை செயலாளர் முருகானந்தம் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Corona ,Finance Secretary ,Muruganantham ,Chennai ,Muruganandam ,Chief Secretariat ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...